Skip to main content

Posts

Featured

மணிமாலா மதியழகனின் முகமூடிகள்

[மணிமாலா மதியழகனின் "முகமூடிகள்" என்ற சிறுகதை தொகுப்பு விரைவில் வெளிவருகிறது. என்னையும் மதித்து முன்னுரை கேட்டார். அது கீழே தரப்பட்டுள்ளது. மற்றவர்கள் முன்னுரை கேட்கும்போதுதான் எனக்கு வயதாகிக் கொண்டு வருவது நினைவுக்கு வருகிறது]. ---- கைத்தட்ட வைக்கும் கதைகள் சிறுகதை திடகாத்திரமும் பேரழகும் வாய்ந்த உயர் ரக குதிரையின் உடம்பைப்போல மிருதுவானது. அதன்மீது கை வைக்க ஜீவ களை ததும்பி நிற்கும். ஆனால் சாதுவாக நம் முன்னால் நிற்கும் குதிரையின் ஆற்றல் வியப்புக்குரியது. லகானைச் சொடுக்கினால் எந்த திசைக்கு வேண்டுமானாலும் நான்குகால் பாய்ச்சலில் பறந்து அந்தந்தத் திசையின் எல்லைகளைக் காட்டக்கூடியது. ஜீவக்களையும், பேராற்றலும் துலங்குபவை மணிமாலா மதியழகனின் “முகமூடிகள்” என்ற இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகள். *** மொத்தம் இருபது சிறுகதைகள். சில கதைகள் நீளமானவை. சில வியக்கவைக்கும் வகையில் நீளம் குறைந்த குறுங்கதைகள். பல கதைகள் சிங்கப்பூரின் முன்னணி இலக்கிய வட்டங்களில் பரிசுகள் பெற்றவை. முக்கிய தமிழ்ச் செய்தித்தாளில் வெளியானவை. நீளமான கதைகள் – சுருக்கமான கதைகள். திரிவிக்கிரமனும் வாமனனும் போல. ம

Latest posts

பௌத்தர்களின் பால்கோவா

முத்திரை சிறுகதைகள் என்னும் மாயமான்

கவிதை தொகுதிகளை வாசிப்பது எப்படி?

யோனிகளைப் பாதுகாத்தல் – ஸ்பானிய இலக்கியத்தில் நடத்தைகெட்ட மனைவிகள்

எஸ். ரா. என்ற அற்புதம்

சூஃபிக்களின் ஞான மரபு

அனுபவக் கதை

பெல்ஜியத்தின் சித்திர நாவல்கள்

கவிதைகள் முடியும் இடம்

சுயம்பிரகாசமாய் சில கவிதைகள் – பொன் வாசுதேவன் ‘நிழலின் வாக்குமூலம்'